July 5 , 2023
509 days
641
- பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனமானது, 2023 ஆம் ஆண்டு உலகளாவிய அமைதிக் குறியீட்டினை வெளியிட்டுள்ளது.
- 79 நாடுகள் அமைதி குறைந்ததாகவும், 84 நாடுகள் மிகவும் அமைதியானதாகவும் மாறி வருகின்றன.
- 2022 ஆம் ஆண்டில் வன்முறையால் உலக நாடுகளுக்கு 17.5 டிரில்லியன் டாலர் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.9% இழப்பு ஏற்பட்டுள்ளது.
- ஐஸ்லாந்து நாடானது, தொடர்ந்து 15வது முறையாக உலகின் மிகவும் அமைதியான நாடாக அறிவிக்கப் பட்டுள்ளது.
- உலக அமைதிக் குறியீட்டில் இடம் பெற்ற 163 நாடுகளில் இந்தியா 126வது இடத்தில் உள்ளது.
- ஆப்கானிஸ்தான் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக உலகின் மிகக் குறைவான அளவு அமைதி நிலவும் நாடாக உள்ளது.
- அதனைத் தொடர்ந்து ஏமன், சிரியா, ரஷ்யா, தெற்கு சூடான் ஆகிய நாடுகள் உள்ளன.
Post Views:
641