TNPSC Thervupettagam

உலக அமைப்புகளில் பாலஸ்தீனம்

May 30 , 2018 2275 days 653 0
  • பாலஸ்தீனியர்கள் இரண்டு உலக அமைப்புகளிலும், இரசாயன ஆயுதங்களின் பரவலை தடுக்கும் உலகளாவிய ஒப்பந்தத்திலும் இணைந்துள்ளனர்.
  • பாலஸ்தீனியர்கள் ஜெனிவாவை மையமாகக் கொண்ட ஐ.நா. வர்த்தக அமைப்பான UNCTAD (United Nations Conference on Trade and Development) என்ற அமைப்பிலும், வியன்னாவைச் சேர்ந்த தொழிற்துறை அமைப்பான UNIDO (United Nations Industrial Development Organization) என்ற அமைப்பிலும் இரசாயன ஆயுதங்கள் ஒப்பந்தம் (Chemical Weapons Convention) அல்லது இரசாயன ஆயுதங்கள் தடுப்பு அமைப்பிலும் (Organization for the Prohibition of Chemical Weapons - OPCW)) இணைந்துள்ளனர்.

  • ஐக்கிய நாடுகள் அமைப்பில், நிறுவனங்களில் உறுப்பினர் பதவியை கேட்டிடவும், சர்வதேச ஒப்பந்தங்களில் உறுப்பினர்களாகவும் வழிவகை செய்யும் உறுப்பினரல்லாத பார்வையாளர் தகுதியை பாலஸ்தீனியர்கள் கொண்டுள்ளனர்.
  • இந்த மாற்றம் சர்வதேச ராஜ்ஜிய உறவுகளில் பாலஸ்தீனியத்தின் தகுதியை உயர்த்தும் அதே வேளையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசேலத்தை அங்கீகரித்து நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சமயத்தில் நிகழ்ந்துள்ளது.
  • OPCW, UNCTAD மற்றும் UNIDO ஆகிய மூன்றும் தமது நடவடிக்கைகளுக்காகவும் வருடாந்திர வரவு செலவுத் திட்டங்களுக்காகவும், ஐ.நாவின் உறுப்பினர்களிடமிருந்து வரும் விருப்பப்படியான நிதிப் பங்களிப்பை நம்பியுள்ளன.
  • முன்னதாக OPCW அமைப்பு திஹேக் நகரில் பாலஸ்தீனிய அரசு, இரசாயன ஆயுதங்கள் தடுப்பு ஒப்பந்தத்தில் 193வது நாடாக அனுமதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
  • ஒட்டுமொத்த பேரழிவு ஆயுதங்களையும் அழிக்க எண்ணும் இரசாயன ஆயுதங்கள் ஒப்பந்தத்தை இஸ்ரேல், எகிப்து, வடகொரியா, தென் சூடான் ஆகிய நான்கு நாடுகள் இன்னும் அதில் உறுப்பினராக சேர உறுதி அளிக்கவில்லை.
  • 2012ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை பாலஸ்தீனத்தை உறுப்பினரல்லாத பார்வையாளர் தகுதிக்கு உயர்த்தியது.
  • சர்வதேச காவல்துறை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், யுனெஸ்கோ மற்றும் தற்போதைய OPCW ஆகிய நான்கும் பாலஸ்தீனியப் பகுதிகளை அரசு என்று குறிப்பிடுகின்றன.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்