இத்தினமானது முதன்முதலில் 2010 ஆம் ஆண்டில் பால்டிக் கடல் தன்னார்வ தொண்டு நிறுவன மன்றத்தால் முன்மொழியப்பட்டது.
முதல் உலக அரசு சாரா அமைப்புகள் தினம் ஆனது 2014 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் பட்டது.
சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதில் அரசு சாரா நிறுவனங்கள் -தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் - (NGO) வகிக்கும் முக்கியப் பங்கை அங்கீகரித்து கொண்டாடுவதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பொதுவாக சுயாதீனமான, இலாப நோக்கற்ற நிறுவனங்களாகும் என்ற நிலையில், அவை பல்வேறு சமூக, சுற்றுச்சூழல் மற்றும் மனிதாபிமானப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக உள்நாடு, தேசிய அல்லது சர்வதேச அளவில் பணியாற்றுகின்றன.
2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "ஒரு நிலையான எதிர்காலத்தை உருவாக்குதல்: நிலையான மேம்பாட்டு இலக்குகளை (SDGs) அடைவதில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பங்கு" என்பதாகும்.