உலக அரசு சாராக் குழு (NGO) தினம் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 27-ம் தேதி அனுசரிக்கப்படுகின்ற ஒரு சர்வதேச ஆண்டுக் குறிப்பேட்டு தினமாகும்.
இது 2010 ஆம் ஆண்டில் பால்டிக் கடற்பிரதேச நாடுகளின் குழுவினுடைய 9-வது பால்டிக் கடல் என்ஜிஓ மன்றத்தின் 12 உறுப்பினர் நாடுகளால் அலுவல்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
முதல் முறையாக இத்தினம் ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளால் 2014-ம் ஆண்டு அனுசரிக்கப்பட்டது.
உலக அரசு சாராக் குழுக்களின் தினத்தினுடைய உலகளாவிய கருத்துருவானது உலகெங்கிலும் உள்ள பல்வேறு அரசு சாராக் குழுக்களையும் அதன் பின்னால் இருக்கும் மக்களையும் “கொண்டாடச் செய்தல், அனுசரித்தல் மற்றும் ஒருங்கிணையச் செய்தல்” என்பதாகும்.