உணவு மற்றும் வேளாண் அமைப்பின் அனைத்து அரிசி விலைக் குறியீடானது, இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சராசரியாக 129.7 புள்ளிகளை எட்டியது.
இது 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இன்று வரை பதிவான மிக அதிகபட்ச அளவாக உள்ளது.
அதிகளவிலான அரிசித் தேவையானது, அரிசியின் விலை உயர்வுகளுக்கான முக்கிய காரணிகளாக உள்ளது.
அரிசி ஏற்றுமதிகளில் இந்திய அரசினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்பது இதற்கான கூடுதல் காரணியாகும்.
இந்தியா, தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் அரிசி ஏற்றுமதி மேற்கொள்ளும் முக்கிய நாடுகளாகும்.
சீனா, பிலிப்பைன்ஸ், பெனின், செனகல், நைஜீரியா மற்றும் மலேசியா ஆகியவை அரிசி இறக்குமதியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
அமெரிக்கா, தாய்லாந்து, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இந்தியாவின் பாஸ்மதி வகை சாராத பச்சரிசி ஏற்றுமதிக்கான சில முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகும்.