உலக அரிவாள் உயிரணு (செல்) விழிப்புணர்வு தினம் – ஜுன் 19
June 23 , 2020 1620 days 429 0
இந்த நோய் பெற்றோர்களிடமிருந்துக் குழந்தைகளுக்கு மரபணு ரீதியில் ஏற்படும் ஒரு இரத்தக் கோளாறு சார்ந்த பிரச்சினையாகும்.
2008 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது அரிவாள் உயிரணு நோயை ஒரு பொதுச் சுகாதாரப் பிரச்சினையாகவும் உலகின் முன்னணியில் உள்ள மரபு சார்ந்த நோய்களில் ஒன்றாகவும் அங்கீகரித்துள்ளது.
இந்தியாவில், இந்நோயானது குஜராத், வடக்கு மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு ஒடிசா ஆகிய மாநிலங்களில் மிகப் பரவலாகக் காணப் படுகின்றது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “உயிரோடு இருப்போம் என்று நம்பிக்கை கொள்ளல்: அரிவாள் உயிரணு நோய் மற்றும் கோவிட் – 19” என்பதாகும்.