இந்த அறிக்கையினை உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO) வெளியிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் இந்தியர்களின் காப்புரிமை தாக்கல் 31.6% (உலகளவில் திடீர் உயர்வு) அதிகரித்துள்ள நிலையில், இது நாட்டின் மேம்பட்டு வரும் புத்தாக்கச் சூழல் அமைப்பை பிரதிபலிக்கிறது.
உலகெங்கிலும் உள்ள கண்டுபிடிப்பாளர்கள் 2022 ஆம் ஆண்டில் 3.46 மில்லியன் காப்புரிமை விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளனர்.
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 1.7% அதிகமாகும்.
இந்திய கண்டுபிடிப்பாளர்கள் முந்தைய ஆண்டை விட 2022 ஆம் ஆண்டில் 15,495 கூடுதல் காப்புரிமை விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்தியர்களின் காப்புரிமை விண்ணப்ப தாக்கல் எண்ணிக்கையானது தொடர்ந்து 11வது ஆண்டாக அதிகரித்துள்ளது.
சீனாவில் 2021 ஆம் ஆண்டினை விட 33,605 அதிக விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
உலகளவில் காப்புரிமை விண்ணப்ப தாக்கலில் இந்தியா அதிக எண்ணிக்கையிலான தாக்கல்களுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.
மிக அதிக எண்ணிக்கையுடன் முன்னணியில் இடம் பெற்றுள்ள சீனாவைத் தொடர்ந்து அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன.
உலகளாவிய மொத்த எண்ணிக்கையில் 2012 ஆம் ஆண்டில் 27.7% ஆக இருந்த சீனாவின் பங்கு 2022 ஆம் ஆண்டில் 46.8% ஆக உயர்ந்துள்ளது.
இதற்கு மாறாக, 23% ஆக இருந்த அமெரிக்காவின் பங்கு ஆனது கடந்த பத்து ஆண்டுகளில் 17.2% ஆக குறைந்துள்ளது.
அறிவுசார் சொத்துரிமை தாக்கல் நடவடிக்கையின் பெரும்பகுதி ஆசியாவில் மேற் கொள்ளப் படுகிற நிலையில், இது 2022 ஆம் ஆண்டில் உலகளாவியக் காப்புரிமை தாக்கல் நடவடிக்கையில் 67.9% ஆகும்.
உலக அளவிலான அறிவுசார் சொத்து உரிமை தாக்கல் நடவடிக்கையில் கிட்டத்தட்ட பாதி பங்கினை சீனா கொண்டுள்ளது.