அன்றாட வாழ்வில் காப்புரிமைகள், பதிப்புரிமைகள், வர்த்தக முத்திரைகள் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றின் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
அறிவுசார் சொத்துரிமை (IP) உரிமைகளின் செயல்பாடு ஆனது உலகில் உள்ள பல்வேறு நாகரிகங்களில் புதுமை மற்றும் படைப்பாற்றலை தூண்டுவதற்கு வேண்டிய ஒன்றாகும்.
அறிவுசார் சொத்து (IP) என்பது ஒரு நபர் அல்லது நிறுவனம் கொண்டிருக்கும் புலப்படாத வகை சொத்து ஆகும்.
அவை அறிவாற்றலின் திறனுக்காக தனிநபர்களுக்கு வழங்கப்படும் பல உரிமைகள் ஆகும்.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'IP and the SDGs: Building Our Common Future with Innovation and Creativity' என்பதாகும்.