TNPSC Thervupettagam

உலக அறிவுசார் சொத்து நிறுவன (WIPO) அறிக்கை

December 27 , 2018 2032 days 567 0
  • உலக அறிவுசார் சொத்து நிறுவனத்தால் (World Intellectual Property Organization-WIPO) 2018 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அறிவுசார் சொத்து குறிகாட்டி அறிக்கை ஜெனிவாவில் வெளியிடப்பட்டது.
  • உலகளவில் 1.4 மில்லியன் காப்புரிமைகள் 2017 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ளன.
  • WIPO-இன் கூற்றுப்படி சீனாவின் காப்புரிமை ஆணையமானது அதிகபட்ச காப்புரிமைகளை வழங்கி உலகளவில் முன்னிலையில் உள்ளது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா இரண்டாமிடத்தில் உள்ளது.
  • 2017 ஆம் ஆண்டில் இந்தியாவில் வழங்கப்பட்ட காப்புரிமைகளின் எண்ணிக்கை 50% அளவிற்கு உயர்ந்துள்ளது. மேலும் இந்த அதிகரிப்பு நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.
  • கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட காப்புரிமைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்