TNPSC Thervupettagam

உலக அறிவுசார் சொத்துக் குறிகாட்டிகள் (WIPI) 2024

November 15 , 2024 13 days 74 0
  • உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பானது (WIPO) 2024 ஆம் ஆண்டிற்கான WIPI அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • உலகளவில், சுமார் 35 லட்சத்திற்கும் அதிகமான காப்புரிமைகள் தாக்கல் செய்யப் பட்டுள்ள நிலையில் 1.64 மில்லியன் எண்ணிக்கையுடன் சீனா முன்னணியில் உள்ளது.
  • இதைத் தொடர்ந்து அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளன.
  • காப்புரிமைத் தாக்கல் செயல்பாட்டில் நிலையான உயர்வுடன் ஜெர்மனியை முந்தி இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் உலகளாவியக் காப்புரிமைத் தாக்கல் 15.7% அதிகரித்துள்ளது என்ற நிலையில் இது தொடர்ந்து 4வது ஆண்டாக நேர்மறை வளர்ச்சியைக் கண்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் ஆசியா உலகளாவியக் காப்புரிமைத் தாக்கல்களில் 68.7%, வர்த்தக முத்திரைத் தாக்கல்களில் 66.7% மற்றும் தொழில்துறை வடிவமைப்புத் தாக்கல்களில் 69% பங்கினைக் கொண்டுள்ளது.
  • IPR காப்புரிமைகள், பதிப்புரிமை, வர்த்தக முத்திரைகள், வடிவமைப்புகள், புவிசார் குறியீடுகள் மற்றும் வர்த்தக இரகசியங்களை உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்