உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பானது (WIPO) 2024 ஆம் ஆண்டிற்கான WIPI அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
உலகளவில், சுமார் 35 லட்சத்திற்கும் அதிகமான காப்புரிமைகள் தாக்கல் செய்யப் பட்டுள்ள நிலையில் 1.64 மில்லியன் எண்ணிக்கையுடன் சீனா முன்னணியில் உள்ளது.
இதைத் தொடர்ந்து அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளன.
காப்புரிமைத் தாக்கல் செயல்பாட்டில் நிலையான உயர்வுடன் ஜெர்மனியை முந்தி இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது.
2023 ஆம் ஆண்டில் உலகளாவியக் காப்புரிமைத் தாக்கல் 15.7% அதிகரித்துள்ளது என்ற நிலையில் இது தொடர்ந்து 4வது ஆண்டாக நேர்மறை வளர்ச்சியைக் கண்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் ஆசியா உலகளாவியக் காப்புரிமைத் தாக்கல்களில் 68.7%, வர்த்தக முத்திரைத் தாக்கல்களில் 66.7% மற்றும் தொழில்துறை வடிவமைப்புத் தாக்கல்களில் 69% பங்கினைக் கொண்டுள்ளது.
IPR காப்புரிமைகள், பதிப்புரிமை, வர்த்தக முத்திரைகள், வடிவமைப்புகள், புவிசார் குறியீடுகள் மற்றும் வர்த்தக இரகசியங்களை உள்ளடக்கியது.