அல்சைமர் நோய் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக 2012 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் மாதம் ஆனது உலக அல்சைமர் மாதமாக அனுசரிக்கப்படுகின்றது. செப்டம்பர் 21 ஆம் தேதி உலக அல்சைமர் தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
“உலக அல்சைமர் அறிக்கை 2019: மறதி நோய் (Dementia) மீதான அணுகுமுறைகள்” ஆனது அல்சைமர் நோய் சர்வதேச அமைப்பால் (Alzheimer’s Disease International - ADI) வெளியிடப்பட்டது.
அல்சைமர் நோய் என்பது ஒரு வளர்வீரிய மூளைக் கோளாறு ஆகும். இது பொதுவாக 60 வயதுகளில் உள்ள நபர்களுக்குத் தோன்றும்.
டிமென்ஷியா என்பது ஒரு நோய்க்குறியாகும். இது நோய் அல்ல. ஆனால் அல்சைமர் என்பது ஒரு நோயாகும்.
டிமென்ஷியா பொதுவாக அல்சைமர் நோயால் ஏற்படுகின்றது.
பார்கின்சன் மற்றும் ஹண்டிங்டன் நோய் போன்ற பிற நோய்களாலும் டிமென்ஷியா ஏற்படலாம்.