இந்தத் தினமானது அல்சைமர் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான உலகளாவிய முன்னெடுப்பாகும்.
அல்சைமர் நோய் மற்றும் பிற வகை மறதி நோய்களைச் சுற்றியுள்ள தவறான தகவல்களை அகற்றுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
அல்சைமர் நோய் ஆனது மிகவும் பொதுவான மறதி நோய் (டிமென்ஷியா) வகை என்ற நிலையில் இது மறதி நோய்களில் 60 முதல் 70% பங்கினைக் கொண்டுள்ளது.
அல்சைமர் நோய் என்பது நினைவகம், சிந்தனை மற்றும் நடத்தை ஆகியவற்றைப் பாதிக்கின்ற ஒரு மூளைக் கோளாறு ஆகும்.
இந்த அறிகுறிகள் காலப்போக்கில் மோசமாகி, ஒருவரின் அன்றாட வாழ்க்கை மற்றும் செயல்பாடுகளை பாதிக்கத் தொடங்கும்.
இது பொதுவாக 65 வயதுக்கு மேற்பட்டவர்களைப் பாதிக்கிறது.
சர்வதேச அல்சைமர் நோய் அமைப்பின் பத்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த நாள் 1994 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதியன்று எடின்பர்க் நகரில் நிறுவப்பட்டது.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘Never Too Early, Never Too Late’ என்பதாகும்.