உலக அளவியல் தினம் - மே 20
May 22 , 2024
186 days
158
- இந்த நாள் என்பது 1875 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதியன்று மீட்டர் உடன்படிக்கை கையெழுத்தானதை நினைவு கூர்கிறது.
- அளவியல் என்பது அளவீடு பற்றிய அறிவியல் ஆய்வு ஆகும்.
- இந்த உடன்படிக்கை மூலம், சர்வதேச எடைகள் மற்றும் அளவீடுகள் வாரியம் (BIPM) நிறுவப் பட்டது.
- BIPM என்பது தரப்படுத்தப்பட்ட அளவீட்டு முறையின் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தும் ஓர் அமைப்பாகும்.
- இது நிலையான எடை அலகு ஆக சர்வதேச கிலோகிராம் முன்மாதிரி (IPK) உருவாக்க வழிவகுத்தது.
- சர்வதேச மீட்டர் முன்மாதிரி ஆனது நீளத்தின் நிலையான அலகாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது.
- 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, நிலைத்தன்மை என்பதாகும்.
Post Views:
158