TNPSC Thervupettagam

உலக அளவிலான பண அனுப்பீடுகளில் இந்தியா முன்னிலை

May 12 , 2024 67 days 182 0
  • 2022 ஆம் ஆண்டில் அதிக பண அனுப்பீடுகளைப் பதிவு செய்த முதல் நாடுகளைப் கொண்ட முதல் நாடாக இந்தியா வரலாறு படைத்துள்ளது.
  • இந்தியாவின் பண அனுப்பீடுகள் ஆனது கடந்த ஆண்டு 111 பில்லியன் டாலராக உயர்ந்து, மற்ற எல்லா நாடுகளையும் விஞ்சியது.
  • 2010, 2015, 2020 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் பண அனுப்பீடுகளில் முதல் நாடாக இந்தியா உள்ளது.
  • மெக்சிகோ, சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் பிரான்ஸ் ஆகிய நான்கு நாடுகளும் பண அனுப்பீடுகளில் முதல் ஐந்து இடங்களில் உள்ளதாக இந்த அறிக்கையானது எடுத்து உரைக்கிறது.
  • தெற்காசியப் பிராந்தியத்தில் கணிசமான எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் காணப்படுவதால், உலகளவில் மிகப் பெரிய அளவிலான பண அனுப்பீடுகளைப் பெறுகிறது.
  • இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகள், உலகில் சர்வதேச அளவிலானப் பண அனுப்பீடுகளில் முதல் பத்து இடங்களில் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்