உலகிலுள்ள கல்வியாளர்களைப் பாராட்டி அவர்களை மதிப்பிட மற்றும் மேம்படுத்திட யுனெஸ்கோவினால் தொடங்கப்பட்ட வருடாந்திர அனுசரிப்பு தினமே அக்டோபர் 5ஆம் தேதியின் உலக ஆசிரியர்கள் தினம் ஆகும்.
பாரிஸில் யுனெஸ்கோவினால் ஏற்படுத்தப்பட்ட நாடுகளுக்கிடையேயான சிறப்பு மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆசிரியர்கள் நிலை குறித்த உலக தொழிலாளர் அமைப்பு மற்றும் யுனெஸ்கோவின் பரிந்துரைகளின்படி உலக தொழிலாளர் அமைப்பின் (ILO-International Labour Organisation) ஒத்துழைப்புடன் யுனெஸ்கோ அக்டோபர் 5ஆம் தேதியை உலக ஆசிரியர் தினமாக அறிவித்தது.
இந்த ஆண்டிற்கான உலக ஆசிரியர் தின கருத்துரு – “கற்பித்தலில் சுதந்திரம் மற்றும் ஆசிரியர்களுக்கு அதிகாரமளித்தல்”.