உலக ஆசிரியர்கள் தினம் (WTD - World Teacher’s Day) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 05 அன்று அனுசரிக்கப்படுகிறது. இத்தினம் சர்வதேச ஆசிரியர்கள் தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
2018 ஆம் ஆண்டிற்காக யுனெஸ்கோ ஏற்றுக் கொண்டுள்ள கருத்துரு: “கல்வி உரிமை என்பது தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் உரிமையாகும்”
யுனிசெப் (UNICEF - United Nations Children Fund), யுஎன்டிபி (UNDP - United Nations Development Programme), சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் சர்வதேச கல்வி (Education International) என்ற நிறுவனம் ஆகியவற்றின் பங்களிப்புடன் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
1994 ஆம் ஆண்டு முதல் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
மேலும் ஆசிரியர்களின் மதிப்பு தொடர்பான 1966 ஆம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் அமைப்பு/யுனெஸ்கோ பரிந்துரைகள் மீது கையொப்பமிட்டதின் நினைவாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.