TNPSC Thervupettagam

உலக ஆயுத ஆற்றல் தரவரிசை 2024

January 19 , 2024 311 days 357 0
  • 2024 ஆம் ஆண்டு உலக ஆயுத ஆற்றல் தரவரிசையின் படி, அமெரிக்க நாடானது உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த இராணுவத்தைக் கொண்ட நாடாக தொடர்ந்து திகழ்ந்து வருகிறது.
  • அதைத் தொடர்ந்து ரஷ்யாவும் சீனாவும் இடம் பெற்றுள்ளன.
  • இந்தத் தரவரிசையில் மதிப்பிடப்பட்ட 145 நாடுகளில் இந்தியா நான்காவது வலிமையான இராணுவத்தைக் கொண்டுள்ளது.
  • தென் கொரிய நாடானது இராணுவ வலிமையின் அடிப்படையில் ஐக்கியப் பேரரசினை முந்தி, உலகின் ஐந்தாவது சக்திவாய்ந்த ஆயுத சக்தியினைக் கொண்ட நாடாக மாறியுள்ளது.
  • பூடான் உலகில் மிகவும் குறைவான சக்தி வாய்ந்த இராணுவத்தைக் கொண்டுள்ள அதே வேளையில் பாகிஸ்தான் 9 வது இடத்தில் உள்ளது.
  • 831 பில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டுடன் அமெரிக்கா தனது இராணுவத்திற்காக அதிகப் பணத்தைச் செலவிடுகிறது.
  • அதைத் தொடர்ந்து சீனா (227 பில்லியன் டாலர்), ரஷ்யா (107 பில்லியன் டாலர்) மற்றும் இந்தியா (74 மில்லியன் டாலர்) ஆகியவை அமைந்துள்ளன.
  • பாதுகாப்புச் செலவினங்கள் அதிகம் கொண்ட ஐந்து முன்னணி நாடுகளின் மொத்த செலவினப் பங்கில் அமெரிக்க 63.3% பங்கு வகிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்