1875 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அறிவியல் ஆய்விற்காக உயிருள்ள விலங்குகளைப் பயன்படுத்துவதற்கு எதிரான தேசியச் சங்கமானது விலங்குப் பரிசோதனைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் உலகின் முதல் அமைப்பாகும்.
இது 1973 ஆம் ஆண்டில் மனித ஆராய்ச்சிக்கான லார்ட் டவுடிங் நிதியை (LDF) நிறுவியது.
அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியின் மேம்பட்ட விலங்கு சோதனை சாராத முறைகளை ஆதரித்து நிதியளிப்பதை இந்த நிதியம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
1979 ஆம் ஆண்டில், NAVS உலக ஆய்வக விலங்குகள் தினத்தை நிறுவியது (ஆய்வக விலங்கு தினம் என்றும் குறிப்பிடப் படுகிறது).
உலகெங்கிலும் உள்ள ஆய்வகங்களில் விலங்குகளுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் மற்றும் அவை கொல்லப்படுவது மீதான கவனத்தை ஈர்ப்பதை இந்த நாள் பெரும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அழகியல், மருத்துவம், விமானப் போக்குவரத்து மற்றும் இராணுவத் தொழில் துறைகளில் கூட விலங்குகள் மீதான பல்வேறு பரிசோதனைகள் பல ஆண்டுகளாக நடைபெறுகிறது.