சர்வதேச எரிசக்தி முகமையினால் (IEA) வெளியிடப்பட்ட இந்த ஒரு அறிக்கையானது முக்கிய ஆற்றல் போக்குகள் மற்றும் கணிப்புகளை வழங்குகிறது.
2023 ஆம் ஆண்டில் மட்டும், உலகளவில் 560 ஜிகாவாட் (GW) புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டில், புதுப்பிக்கத்தக்க ஆற்றலானது நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றினை விஞ்சி, மின்சாரத்தினை உற்பத்தி செய்வதற்கான பெரும் முன்னணி மூல ஆதாரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2030 ஆம் ஆண்டிற்குள் புதிய கார் விற்பனையில் மின்சார வாகனங்கள் 50% பங்கினை வகிக்கும் என்று எதிர்பார்க்கப் படுவதோடு, மேலும் உலகளாவிய மின்சார வாகன (EV) சந்தை வேகமாகவும் விரிவடைந்து வருகிறது.
இந்தியா 2028 ஆம் ஆண்டிற்குள் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமாக மாறும் பாதையில் சரியாக செயலாற்றி வருகிறது.
2035 ஆம் ஆண்டில் இரும்பு மற்றும் எஃகு உற்பத்தி சுமார் 70% வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் சிமெண்ட் உற்பத்தி சுமார் 55% உயரும்.
காற்றுப் பதனாக்கிகளின் (AC) உற்பத்தி சுமார் 4.5 மடங்குக்கு மேல் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது 2035 ஆம் ஆண்டில் மெக்சிகோ நாட்டில் எதிர்பார்க்கப்படும் மின் நுகர்வை விட, இந்தியாவின் காற்றுப் பதனாக்கிகளுக்கான மின்சாரத் தேவை அதிகரிக்க உள்ளது.
இந்தியாவின் மொத்த எரிசக்தித் தேவையானது 2035 ஆம் ஆண்டிற்குள் சுமார் 35% அளவு அதிகரிக்கும்.
அதன் மின் உற்பத்தி திறன் ஆனது 1400 ஜிகாவாட் என்ற ஒரு அளவிற்கு சுமார் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.