ஆற்றல் மாற்றம் சார்ந்த தொழில்நுட்பங்களில் மேற்கொள்ளப்படும் உலக நாடுகளின் முதலீடு ஆனது 2022 ஆம் ஆண்டில் 1.3 டிரில்லியன் டாலர் என்ற புதியச் சாதனையை எட்டியுள்ளது.
இது சர்வதேசப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மையத்தால் வெளியிடப் பட்டுள்ளது.
ஆனால், 2022 ஆம் ஆண்டில் உலகளாவியப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகளில் வளர்ந்து வரும் நாடுகளில் 15 சதவீதத்தினை மட்டுமே பெற்றுள்ளன.
குறைவான வளர்ச்சியடைந்த நாடுகளில் 2013 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் சராசரியாக மொத்தப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகளில் 0.84 சதவீதத்தினை மட்டுமே பெற்றுள்ளன.
இந்த முதலீடுகளில் பெரும்பகுதியினை பிரேசில், சிலி மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.
2017 ஆம் ஆண்டில் 27 சதவீதமாக இருந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான மொத்த முதலீடானது 2020 ஆம் ஆண்டில் 15 சதவீதமாக குறைந்துள்ளன.
தெற்காசியாவில், தனிநபர் முதலீடுகள் 2015 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 26 சதவீதம் குறைந்துள்ளது.
இந்த அறிக்கையின்படி, 2021 மற்றும் 2030 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் உலக நாடுகளுக்குச் சராசரியாக 5.7 டிரில்லியன் டாலர் வருடாந்திர முதலீடுகள் தேவைப் படும்.
இந்த இலக்கை அடைவதற்கு 2031 மற்றும் 2050 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 3.7 டிரில்லியன் டாலர் தேவைப் படுகிறது.