TNPSC Thervupettagam

உலக ஆற்றல் மாற்றக் குறியீடு 2024

June 25 , 2024 151 days 400 0
  • உலகப் பொருளாதார மன்றம் (WEF) ஆனது உலக ஆற்றல் மாற்றக் குறியீட்டை வெளியிட்டுள்ளது.
  • 67வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது மொத்தம் 120 நாடுகளில் 63வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
  • சுவீடன் இந்தக் குறியீட்டில் முதலிடத்தினைப் பெற்றதோடு, மற்ற ஐரோப்பிய நாடுகள் இந்தப் பட்டியலில் முன்னணி இடங்களைப் பெற்றுள்ளன.
  • அதைத் தொடர்ந்து டென்மார்க், பின்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இதன் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.
  • சீனா இதில் 20வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் உயிரி எரிபொருட்கள் ஆகியவற்றுடன் கூடிய இந்தியாவின் தூய்மையான எரிசக்தி உள்கட்டமைப்பு ஆனது, அதன் மின் உற்பத்தி திறனில் 42% பங்கினைக் கொண்டுள்ள நிலையில் இது உலகளவில் நான்காவது பெரிய புதுப்பிக்கத் தக்கச் சந்தையாக இந்தியாவினை மாற்றுகிறது.
  • CO2 மதிப்பீட்டில் 1.7 டன் ஆக உள்ள இந்தியாவின் தனிநபர் உமிழ்வுகள் ஆனது, CO2 மதிப்பீட்டில் 4.4 டன் என்ற உலக சராசரி அளவை விட 60% குறைவாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்