TNPSC Thervupettagam

உலக ஆற்றல் முதலீட்டு அறிக்கை 2024

June 15 , 2024 15 days 102 0
  • தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பங்கள் மற்றும் உள்கட்டமைப்பில் முதலீடு ஆனது 2024 ஆம் ஆண்டில் 3 டிரில்லியன் டாலர் என்ற ஒரு புதிய உலகளாவிய அதிகபட்ச அளவினை எட்டும்.
  • இந்த ஆண்டு சுமார் 675 பில்லியன் டாலர்களுடன் தூய்மையான எரிசக்தி முதலீட்டில் சீனா மிகப்பெரிய பங்கைக் கொண்டிருக்கும்.
  • புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடு ஆனது இந்த ஆண்டு 7% அதிகரித்து 570 பில்லியன் டாலராக இருக்கும்.
  • மேலும், மற்ற வளர்ந்து வரும் மற்றும் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரங்களில் தூய்மையான எரிசக்தி முதலீடு சுமார் 320 பில்லியன் டாலர் என்ற அளவில் குறைவாக உள்ளது.
  • இந்தியாவின் செலவினம் ஆனது 2023 ஆம் ஆண்டில் 68 பில்லியன் டாலரை எட்டியது என்ற நிலையில் இது 2016-2020 ஆம் ஆண்டுகளின் சராசரியை விட சுமார் 40 சதவீதம் அதிகமாகும்.
  • புதைபடிவ எரிபொருள் முதலீடு ஆனது அதே காலகட்டத்தில் 6 சதவீதம் அதிகரித்து 2023 ஆம் ஆண்டில் 33 பில்லியன் டாலர்களை எட்டியது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் 500 ஜிகாவாட் (Gw) புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் என்ற இந்தியாவின் இலக்கினை நிறைவு செய்ய அடுத்த ஏழு ஆண்டுகளில் 190 பில்லியன் டாலர் முதல் 215 பில்லியன் டாலர் வரை முதலீடு தேவைப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்