TNPSC Thervupettagam

உலக ஆற்றல் வேலைவாய்ப்பு அறிக்கை

September 22 , 2022 670 days 317 0
  • சர்வதேச எரிசக்தி முகமையானது (IEA) உலக எரிசக்தி ஆற்றல் அறிக்கையை வெளியிட்டது.
  • இந்த முதலாவது உலக ஆற்றல் வேலைவாய்ப்பு அறிக்கையானது, உலகளாவிய ஆற்றல் செயல்பாட்டு அமைப்பின் முதல் விரிவான அறிக்கையாகும்.
  • 2019 ஆம் ஆண்டில், எரிசக்தி துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற துறைகளில் 65 மில்லியன் மக்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
  • உலகெங்கிலும் உள்ள முறைசார் வேலைவாய்ப்புகளில் இது இரண்டு சதவிகிதம் ஆகும்.
  • இந்தத் துறையில் நேரடியாக 41 மில்லியன் மக்கள் வேலைவாய்ப்புப் பெற்றதோடு, 24 மில்லியன் பேர் வாகன உற்பத்தி போன்ற ஆற்றலின் இறுதிப் பயனர் பயன்பாட்டுத் துறைகளிலும் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
  • 2021 ஆம் ஆண்டில் ஆற்றல் துறை முழுவதும் பணியமர்த்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1.3 மில்லியன் ஆக அதிகரித்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் இது 6 சதவீதம் அதிகரிக்கலாம்.
  • 2019 ஆம் ஆண்டில், 50 சதவீத ஆற்றல் துறை சார்ந்த பணியாளர்கள் தூய்மையான எரி சக்தித் தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் பணியமர்த்தப்பட்டனர்.
  • புதைபடிவ எரிபொருட்களில், 2019 ஆம் ஆண்டில் எண்ணெய் விநியோகத் துறையில் 8 மில்லியன் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதால் அதிகளவுத் தொழிலாளர்ப் பங்கேற்பினை இத்துறை கொண்டுள்ளது.
  • இது 2021 ஆம் ஆண்டில் 7.1 மில்லியன் ஆக குறைந்துள்ளதோடு 2022 ஆம் ஆண்டில் இது சற்று அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
  • எரிசக்தி முதலீடு 2022 ஆம் ஆண்டில் எட்டு சதவிகிதம் அதிகரித்து 2.4 டிரில்லியன் டாலர்களைத் தொடும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்