TNPSC Thervupettagam

உலக ஆஸ்துமா தினம் – மே 04

May 6 , 2021 1211 days 438 0
  • உலக ஆஸ்துமா தினமானது ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டில் உலக ஆஸ்துமா தினம் மே 04 ஆம் தேதியன்று கடைபிடிக்கப்பட்டது.
  • இந்தத் தினமானது உலகம் முழுவதும் ஆஸ்துமா நோய் பற்றியும் அதற்கான மருத்துவ சிகிச்சை பற்றியும் விழிப்புணர்வைப் பரப்புகிறது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, ஆஸ்துமா பற்றிய தவறான கருத்துகளை வெளிக் கொணர்தல்” (Uncovering Asthma Misconceptions) என்பதாகும்.
  • உலக ஆஸ்துமா தினமானது ஆஸ்துமாவிற்கான உலகளாவிய முன்னெடுப்பு (Global Initiative for Asthma – GINA) எனும் அமைப்பினால் ஒவ்வொரு வருடமும் ஏற்பாடு செய்யப் படுகிறது.
  • 1998 ஆம் ஆண்டில்  ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்ற ஆஸ்துமா குறித்த முதல் உலகச் சந்திப்புடன் 35க்கும் மேற்பட்ட நாடுகளில் முதல் உலக ஆஸ்துமா தினமானது கொண்டாடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்