உலகப் பொருளாதார மன்றமானது, 2022-2023 ஆம் ஆண்டு உலகளாவிய இடர் கருத்துக் கேட்புக் கணக்கெடுப்பின் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டின் உலக இடர் அறிக்கையின் 18வது பதிப்பை வெளியிட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவின நெருக்கடி, உணவு விநியோக நெருக்கடி, எரிசக்தி விநியோக நெருக்கடி, அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த உள் கட்டமைப்பு மீதான இணையத் தாக்குதல்கள் ஆகியவை தற்போது உலகம் எதிர் கொண்டு வரும் மிகப்பெரிய ஆபத்துகளாகும்.
தற்போதைய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதாரப் போக்குகளால் உருவாக்கப் படுகின்ற சமூக மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான இடர்கள் 2025 ஆம் ஆண்டில் அதிகம் ஏற்பட உள்ளன.
உலக அபாயங்கள் அனைத்திலும் 'வாழ்க்கைச் செலவினம் சார்ந்த நெருக்கடி தான்' முதல் இடத்தில் இருப்பதாக இந்த அறிக்கை தரவரிசைப் படுத்தியுள்ளது.
எரிபொருள் விலையேற்றம் காரணமாக கிட்டத்தட்ட 92 நாடுகளில் போராட்டங்கள் வெடித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.