TNPSC Thervupettagam

உலக இட்லி தினம் – மார்ச் 30

March 31 , 2022 880 days 417 0
  • சென்னையைச் சேர்ந்த பிரபல இட்லித் தயாரிப்பாளரான இனியவன் என்பவர் இந்தத் தினத்தினைத் தொடங்கினார்.
  • இது 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இட்லி, இந்தியாவின் ஒரு முக்கிய உணவாக இருந்தாலும், சில வரலாற்றாசிரியர்கள் அது இந்தோனேசியாவில் உருவாகியதாகக் கூறுகின்றனர்.
  • இந்த நாடானது புளித்த உணவு வகைப் பாரம்பரியத்திற்குப் புகழ் பெற்றது.
  • இந்தப் பாரம்பரியமானது கி.பி. 800–1200 என்ற காலத்தில் ஓர் அவிக்கப்பட்ட இட்லியாக இந்தியா வந்தது.
  • இட்லி என்ற சொல், உளுந்து மாவிலிருந்து உருவாக்கப்பட்ட உணவான “இட்டாலிகே” என்ற ஒரு சொல்லிலிருந்து வந்ததாகக் கூறுகின்றனர்.
  • இது கி.பி. 1130 ஆம் ஆண்டைச் சேர்ந்த சமஸ்கிருத மனசோலசா (Manasollasa) என்ற நூலில் உளுந்துப் பருப்பிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவான “இட்டாரிகா” என்பது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
  • 17 ஆம் நூற்றாண்டில், தமிழ் மக்கள் முதலில் இந்த உணவை “இட்லி” என்று குறிப்பிடச் செய்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்