உலக இணையத் தணிக்கைக்கு எதிரான தினம் என்பது அனைவரும் அணுகக் கூடிய ஒற்றையான மற்றும் கட்டுப்பாடற்ற இணையத்தை பயன்படுத்தும் நோக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 12 அன்று அனுசரிக்கப்படும் ஒரு நிகழ்நேர (ஆன்லைன்) நிகழ்ச்சியாகும்.
இத்தினமானது உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் நிகழ்நேர உரைகளைத் தடுத்தல் மற்றும் தணிக்கை செய்தல் ஆகியவற்றைத் தடுப்பதற்கான வழிகளின் மீது கவனத்தைச் செலுத்துகிறது.
இத்தினமானது எல்லைகளை கடந்த பத்திரிக்கையாளர்கள் அமைப்பு (Reporters Without Borders) மற்றும் அம்னெஸ்டி சர்வதேச நிறுவனம் ஆகியவற்றின் வேண்டுகோளையடுத்து 2008 ஆம் ஆண்டு மார்ச் 12 அன்று முதன்முறையாக கடைபிடிக்கப்பட்டது.