இது இதய நோய் மற்றும் இதயம் சார் நோய்களை நிர்வகிப்பதற்கான, அதன் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
உலகளவில் இதய நோய்கள் (CVDs) இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக, உலகளாவிய இறப்புகளில் சுமார் 31% அல்லது 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதய நோயால் இறக்கின்றனர்.
உலக இதயக் கூட்டமைப்பு 2024 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை “Use Heart for Action” என்ற கருத்துருவுடன், புதிய மூன்றாண்டு உலக இதய தினப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.