TNPSC Thervupettagam

உலக இந்தி மொழி தினம் - ஜனவரி 10

January 13 , 2025 2 days 48 0
  • 1949 ஆம் ஆண்டு இதே நாளில் தான் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் (UNGA) இந்தி மொழி முதன்முதலில் பேசப்பட்டது.
  • இந்தி மொழி பற்றிய பெரும் விழிப்புணர்வைப் பரப்புதல், சர்வதேச தளங்களில் அதன் பயன்பாட்டை மிக நன்கு ஊக்குவித்தல் மற்றும் உலகளவில் இந்தி மொழி பேசும் சமூகங்களிடையே உறவுகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றை இது ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1950 ஆம் ஆண்டில், இந்தி மொழியானது இந்திய ஒன்றியத்தின் அதிகாரப் பூர்வ மொழியாக அறிவிக்கப்பட்டது மற்றும் இந்திய அரசியலமைப்பின் 343வது சரத்தின் கீழ் அதன் எழுத்து வடிவமாக தேவநகரியும் நியமிக்கப்பட்டது.
  • 1975 ஆம் ஆண்டில், முதல் உலக இந்தி மொழி மாநாட்டை மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் அப்போதையப் பிரதமர் இந்திரா காந்தி தொடங்கி வைத்தார்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Hindi: A Global Voice of Unity and Cultural Pride" என்பதாகும்.
  • 12வது உலக இந்தி மொழி மாநாடு-2023 ஆனது ஃபிஜியில் ஏற்பாடு செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்