உலக இந்துப் பொருளாதார மன்றமானது (World Hindu Economic Forum - WHEF) இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கிடையேப் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காகவும் தனது பொருளாதார வாய்ப்புகளுக்காக உலக அமைப்புடன் நேபாளத்தை இணைப்பதற்காகவும் தனது நேபாளப் பிரிவைத் தொடங்கியுள்ளது.
WHEF ஆனது 2012 ஆம் ஆண்டில் ஹாங்காங்கில் தொடங்கப்பட்டது.
இது வலிமையான பொருளாதார வல்லுநர்கள், கல்வியாளர்கள், தொழிற்துறை வல்லுநர்கள், வர்த்தகர்கள், வங்கியாளர்கள், தொழில்சார் வல்லுநர்கள் மற்றும் ஆர்வலர்களின் குழுவாகும்.
இதன் தத்துவம் “பொருளாதாரமே வலிமை வாய்ந்தது” (தர்மாஸ்யா மூலம் - அர்தாஹ் - அர்த்த சாஸ்திரம்) என்பதாகும்.