2020 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் என்னவென்றால் - 'இரத்த அழிவுச்சோகைக்கு வேண்டி ஒரு புதிய சகாப்தத்தின் விடியல் - சிறந்த சிகிச்சை முறைகளை நோயாளிகளுக்கு அணுகக் கூடியதாகவும், விலை மலிவாகவும் வேண்டிய முறையில் மாற்றுவதற்கான உலகளாவிய முயற்சிக்கான நேரம்’ என்பதாகும்.
இது இரத்த அழிவுச்சோகை சர்வதேசக் கூட்டமைப்பால் 1994 ஆம் ஆண்டு முதல் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
இது ஒரு மரபுவழி இரத்தக் கோளாறாகும். இது நமது உடலில் இயல்பை விட குறைவான சிவப்பணுப் புரதம் இருக்கக் காரணமாகிறது.
சிவப்பணுப் புரதமானது சிவப்பு இரத்த அணுக்கள் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல உதவுகிறது.
இரத்த அழிவுச்சோகை நோயாளிகள் குறைந்த அளவு சிவப்பணுப் புரதம் காரணமாக இரத்தச் சோகையால் பாதிக்கப் படுகின்றனர்.
இரத்த அழிவுச்சோகையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் மேற்கு வங்கம் ஆகும்.