இந்தத் தினமானது ஃபிராங்க் ஷ்னாபல் என்பவரின் பிறந்தநாளை நினைவு கூருகிறது.
இவர் உலக இரத்த உறையாமை நோய் (ஹீமோபிலியா) கூட்டமைப்பை நிறுவியவர் ஆவார்.
இரத்த உறையாமை நோய் மற்றும் பிற இரத்தப் போக்குக் கோளாறுகள் பற்றிய விழிப்பு உணர்வினை அதிகரிக்கவும் அது குறித்த கல்வியை வழங்கவும் இந்தத் தினமானது ஒரு தளமாகச் செயல்படுகிறது.
ஒரு அரிய நோயான இரத்த உறையாமை நோய் என்ற இந்த நோயில் சில குறிப்பிட்ட உறைதல் காரணிகளின் குறைபாட்டின் காரணமாக இரத்தம் சரியாக உறைவதில்லை.
சில சந்தர்ப்பங்களில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் ஒரு நீண்ட நேர இரத்தப் போக்கு ஏற்படுகிறது.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “அனைவருக்குமான அணுகல்: கூட்டாண்மை. கொள்கை. முன்னேற்றம். அரசாங்கத்தினை ஈடுபடுத்துதல், மரபுவழி இரத்தப் போக்கு கோளாறுகளைத் தேசியக் கொள்கையில் ஒருங்கிணைத்தல்” என்பது ஆகும்.