இத்தினமானது உலக இரத்தப் போக்கு நோய்க் கூட்டமைப்பினால் அனுசரிக்கப் படுகின்றது.
இது மரபுவழி இரத்தப் போக்கு நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப் படுகின்றது.
இரத்தப் போக்கு நோய் என்பது இரத்தம் சரியாக உறையாகாமல் இருக்கும் ஒரு மரபுவழி இரத்தப் போக்கு நோயாகும்.
இந்த ஆண்டின் இத்தினத்தின் கருத்துரு “Get + Involved Virtually and Stay Safe” (கிட்டத்தட்ட இணைந்தும் பாதுகாப்பாகவும் இருத்தல்) என்பதாகும்.
ஏப்ரல் 17 என்ற தேதியானது உலக இரத்தப் போக்கு நோய்க் கூட்டமைப்பின் நிறுவனரான, கடுமையான இரத்தப் போக்கு நோயுடன் பிறந்த கனடா நாட்டு வணிகரான பிரான்க் ஸ்னாபெலின் பிறந்த தினமாகும்.