உலக இரத்தம் உறையாமை நோய்க் கூட்டமைப்பு (WFH) ஆனது இந்த உலகளாவிய நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.
நோய் கண்டறிதல், சிகிச்சை மற்றும் விரிவான சிகிச்சை ஆகியவற்றிற்கான ஒரு அணுகலைப் பெறுவதற்காக மக்களுக்கு உதவும் வகையில் இந்த நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இந்த நாள் முயற்சிக்கிறது.
இரத்தம் உறையாமை நோய் என்பது ஒரு மரபுவழி இரத்தப் போக்கு கோளாறு ஆகும் என்பதோடு இந்த நிலையில் இரத்தம் சரியாக உறைவதில்லை.
இது தானாக ஏற்படும் இரத்தப்போக்கு மற்றும் பல்வேறு காயங்கள் அல்லது அறுவை சிகிச்சைக்குப் பிறகான இரத்த ப்போக்குக்கு வழிவகுக்கிறது.
2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்திற்கான கருத்துரு, "அனைவருக்கும் சமமான அணுகல்: அனைத்து இரத்தப் போக்குக் கோளாறுகளையும் அடையாளம் காணுதல்" என்பதாகும்.