TNPSC Thervupettagam

உலக இராணுவச் செலவின அறிக்கை

April 30 , 2023 575 days 293 0
  • ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனமானது (SIPRI) இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் உலகிலேயே அதிகளவில் இராணுவச் செலவினங்கள் செய்த நான்காவது பெரிய நாடாக இந்தியா உள்ளது.
  • இது அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் இருந்தது.
  • இதில் சவுதி அரேபியா ஐந்தாவது இடத்தில் இருந்தது.
  • இந்த ஐந்து நாடுகள், உலக நாடுகளின் இராணுவச் செலவில் சுமார் 63 சதவீதத்தினைக் கொண்டுள்ளன.
  • இந்தியாவின் இராணுவச் செலவினமான 81.4 பில்லியன் டாலர்கள் என்பது உலகிலேயே நான்காவது மிக அதிகமாக இருந்தது.
  • இது 2021 ஆம் ஆண்டினை விட 6% அதிகமாகவும், 2013 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட 47% அதிகமாகவும் இருந்தது.
  • 2022 ஆம் ஆண்டில் உலக நாடுகளின் மொத்த இராணுவச் செலவு 3.7% அதிகரித்து, 2,240 பில்லியன் டாலர் என்ற புதிய உச்சத்தைத் தொட்டது.
  • மேலும், உலக நாடுகளின் ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கானது கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகபட்சமாக 11% ஆக இருந்தது.
  • அதைத் தொடர்ந்து சவுதி அரேபியா (9.6%), கத்தார் (6.4%), ஆஸ்திரேலியா (4.7%) மற்றும் சீனா (4.7%) ஆகிய நாடுகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்