உலக இராணுவச் செலவின அறிக்கை
April 30 , 2023
575 days
292
- ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனமானது (SIPRI) இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
- 2022 ஆம் ஆண்டில் உலகிலேயே அதிகளவில் இராணுவச் செலவினங்கள் செய்த நான்காவது பெரிய நாடாக இந்தியா உள்ளது.
- இது அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் இருந்தது.
- இதில் சவுதி அரேபியா ஐந்தாவது இடத்தில் இருந்தது.
- இந்த ஐந்து நாடுகள், உலக நாடுகளின் இராணுவச் செலவில் சுமார் 63 சதவீதத்தினைக் கொண்டுள்ளன.
- இந்தியாவின் இராணுவச் செலவினமான 81.4 பில்லியன் டாலர்கள் என்பது உலகிலேயே நான்காவது மிக அதிகமாக இருந்தது.
- இது 2021 ஆம் ஆண்டினை விட 6% அதிகமாகவும், 2013 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட 47% அதிகமாகவும் இருந்தது.
- 2022 ஆம் ஆண்டில் உலக நாடுகளின் மொத்த இராணுவச் செலவு 3.7% அதிகரித்து, 2,240 பில்லியன் டாலர் என்ற புதிய உச்சத்தைத் தொட்டது.
- மேலும், உலக நாடுகளின் ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கானது கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகபட்சமாக 11% ஆக இருந்தது.
- அதைத் தொடர்ந்து சவுதி அரேபியா (9.6%), கத்தார் (6.4%), ஆஸ்திரேலியா (4.7%) மற்றும் சீனா (4.7%) ஆகிய நாடுகள் உள்ளன.
Post Views:
292