ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 29-ம் தேதி இருதய நோய்கள் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்த உலக இருதய தினம் அனுசரிக்கப்படுகின்றது.
2018 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “உங்கள் இருதயமும் எங்கள் இருதயமும்” (Your heart, my heart).
இது ஒரு வருடாந்திர நிகழ்வாக 2000-ம் ஆண்டு உலக இருதய கூட்டமைப்பால் ஏற்படுத்தப்பட்டது.
ஆரம்பத்தில் உலக இருதய தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமை அனுசரிக்கப்பட்டது. ஆனால் 2011ம் ஆண்டு முதல் செப்டம்பர் 29-ம் தேதி அதற்கான தினமாக நிர்ணயிக்கப்பட்டது.