TNPSC Thervupettagam
April 27 , 2022 818 days 409 0
  • எடெல்வியெஸ் பரஸ்பர நிதி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராதிகா குப்தா, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ராகவ் சாதா மற்றும் உக்ரைனிய துணைப் பிரதமர் மற்றும் டிஜிட்டல் பரிமாற்றத் துறை அமைச்சர் மைக்கைலோ ஃபெடோரோவ் ஆகியோரை உலகப் பொருளாதார மன்றம் தனது 2022 ஆம் ஆண்டு உலக இளம் தலைவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளது.
  • உலகப் பொருளாதார மன்றமானது, இந்தப் பட்டியலை உலகின் 40 வயதிற்குட்பட்ட மிகவும் நம்பிக்கைக்குரிய 109 இளம் தலைவர்கள் என்று விவரித்துள்ளது.
  • இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் சுகாதாரச் சமத்துவம், பசுமை ஆற்றல், கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் அகதிகளின் உரிமைகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
  • சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில் இந்தியர்களான தடகள வீராங்கனை மானசி ஜோஷி, இன்னோவ்8 கோவொர்க்கிங் நிறுவனத்தின் நிறுவனர் ரித்தேஷ் மாலிக், பாரத் பே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுஹைல் சமீர், சுகர் அழகு சாதனப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினிதா சிங் மற்றும் உலக இமாலயப் பயண நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி  ஜெய்தீப் பன்சால் ஆகியோர் அடங்குவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்