கனடாவின் மார்க்ஹாமில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான லீ நிங் பிடபிள்யூஎப் (BWF) உலக இளையோர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் முன்னிலை இளையோர் பாட்மிண்டன் வீரரான லக்ஷயா சென் (17) வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
ஒற்றையருக்கான அரை இறுதிப் போட்டியில் இவர் தாய்லாந்தைச் சேர்ந்த உலக முதல்தர வீரரான குன்லவுட் விட்டிட்சார்னிடம் தோல்வியடைந்தார்.
புகழ்பெற்ற இந்த போட்டியில் சென்னின் முதலாவது பதக்கம் இதுவாகும். இதற்குமுன் இவர் இப்போட்டியில் மூன்று முறை பங்கு பெற்றுள்ளார்.
பிடபிள்யூஎப் உலக இளையோர் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறுவர்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஒட்டுமொத்தமாக இந்தியாவின் 5-வது வெண்கலப் பதக்கம் இதுவாகும். இந்த ஆண்டு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா ஒரேயொரு வெண்கலப் பதக்கத்தை மட்டும் வென்றுள்ளது.