இத்தினமானது 1971 ஆம் ஆண்டு சர்வதேச ஒப்பந்தமாக ஏற்றுக் கொள்ளப் பட்ட ஈர நிலங்கள் தொடர்பான உடன்படிக்கையின் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
பூமியின் நிலப்பரப்பில் சுமார் 6% மட்டுமே ஈரநிலங்கள் இருந்தாலும், அனைத்து தாவர மற்றும் விலங்கு இனங்களில் சுமார் 40% ஆனது ஈரநிலங்களில் வாழ்கின்றன அல்லது இனப்பெருக்கம் செய்கின்றன.
1700 ஆம் ஆண்டுகளில் இருந்து உலகின் சுமார் 90% ஈரநிலங்கள் சீரழிந்து விட்டன, மேலும் புவியில் காடுகளை விட மூன்று மடங்கு மிக வேகமாக ஈரநிலங்கள் இழந்து வருகின்றன.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Protecting Wetlands for Our Common Future" என்பதாகும்.