ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 02-ம் தேதி உலக ஈரநிலங்களுக்கான தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
இத்தினம் ஈரானிய நகரமான ராம்சாரில் 1971 ஆம் ஆண்டு பிப்ரவரி 02-ம் தேதியன்று ஈரநிலங்களுக்கான ராம்சார் ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டதைக் குறிக்கின்றது.
ஈரநிலங்கள் மற்றும் பருவநிலை மாற்றம் எனும் கருத்துருவுடன் 2019 ஆம் ஆண்டின் உலக ஈரநிலங்களுக்கான தினம் கொண்டாடப்பட்டது.
இந்த கருத்துரு பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் கணித்து அதற்கேற்ப தகவமைத்துக் கொள்வதில் ஒரு இயற்கையான தீர்வு முறைகளாக ஈரநிலங்களால் வழங்கப்படும் தீர்வுகளின் முக்கியப் பங்கினை உயர்த்திக் காண்பித்திட எண்ணுகின்றது.