1971 ஆம் ஆண்டில் ஈரானில் உள்ள ஒரு நகரமான ராம்சாரில் ஈரநிலங்கள் தொடர்பான ஒப்பந்தம் ஒன்று ஏற்றுக் கொள்ளப் பட்டதைக் குறிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2 ஆம் தேதியன்று உலக ஈரநிலங்கள் தினமானது கொண்டாடப்படுகின்றது.
இந்தியா 1982 ஆம் ஆண்டு முதல் இந்த ஒப்பந்தத்தில் ஒரு அங்கமாக இருந்து வருகின்றது. மேலும் ஈரநிலங்களைத் திறனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கான ராம்சார் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது.
2020 ஆம் ஆண்டின் இத்தினத்தின் கருத்துரு, ‘ஈரநிலங்கள் மற்றும் பல்லுயிர் பெருக்கம்’ என்பதாகும்.
ஈரநிலங்கள் என்பது பருவகாலத்தின் போது அல்லது நிரந்தரமாக நீரால் சூழப்பட்டுள்ள ஒரு சுற்றுச்சூழல் அமைப்பாகும்.
சதுப்பு நிலக் காடுகள், சதுப்பு நிலங்கள், ஆறுகள், ஏரிகள், கழிமுகங்கள், ஆற்றுச் சமவெளிகள் & வெள்ளம் சூழ்ந்த காடுகள், நெல் வயல்கள் மற்றும் பவளப் பாறைகள் ஆகியவை இதில் அடங்கும்.
ஈரநிலங்கள் தொடர்பான ராம்சார் ஒப்பந்தமானது உலகளாவிய ஈரநிலக் கண்ணோட்டத்தை வெளியிடுகின்றது.
இந்தியாவில் தற்பொழுது 37 ராம்சார் தளங்கள் உள்ளன. இந்தத் தளங்கள் 1.07 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் பரவிக் காணப்படுகின்றன.