TNPSC Thervupettagam

உலக உடல் பருமன் குறித்தத் தகவல் தொகுப்பு 2023

March 12 , 2023 624 days 327 0
  • உலக உடல் பருமன் கூட்டமைப்பானது, “2023 ஆம் ஆண்டிற்கான உலக உடல் பருமன் குறித்த தகவல் தொகுப்பு” என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • இந்தியாவில் குழந்தைப் பருவ உடல் பருமன் ஆனது 2035 ஆம் ஆண்டளவில் 9.1 சதவீதமாக அதிகரிக்கும்.
  • இந்தியாவில் 2035 ஆம் ஆண்டிற்குள் 11 சதவீதம் பேர் அதிக உடல் பருமனைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.
  • 2020 மற்றும் 2035 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் வயது வந்தோர் மத்தியில் நிலவும் உடல் பருமனில் ஏற்படும் வருடாந்திர அதிகரிப்பானது 5.2 சதவீதமாக இருக்கும்.
  • 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள சிறுவர்கள் மத்தியில் ஏற்படும் உடல் பருமன் அபாயம் ஆனது 3 சதவிகிதம் ஆக இருந்த நிலையில் இது 2035 ஆம் ஆண்டில் இந்த ஆபத்து 12 சதவிகிதமாக அதிகரிக்கும்.
  • 2020 ஆம் ஆண்டில் பெண் குழந்தைகள் மத்தியில் இதற்கான அபாயம் 2 சதவீதமாக இருந்த நிலையில், அடுத்த 12 ஆண்டுகளில் இது 7 சதவீதமாக உயரும்.
  • 2020 ஆம் ஆண்டில் இந்தியப் பெண்கள் மத்தியில் ஏற்படும் உடல் பருமன் ஆபத்து 7 சதவிகிதம் ஆக இருந்த நிலையில், இது 2035 ஆம் ஆண்டிற்குள் 13 சதவிகிதமாக உயரும்.
  • 2020 ஆம் ஆண்டில் ஆண்கள் மத்தியில் ஏற்படும் உடல் பருமன் ஆபத்து 4 சதவீதமாக இருந்த நிலையில், இது அடுத்த 12 ஆண்டுகளில் 8 சதவீதமாக உயரும்.
  • 2035 ஆம் ஆண்டிற்குள் உடல் பருமன் ஆபத்து 4.32 டிரில்லியன் டாலர் மதிப்பிலான மொத்தப் பொருளாதார இழப்பிற்கு வழி வகுக்கும்.
  • இது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 3 சதவீதத்திற்குச் சமம் ஆகும்.
  • இது இந்தியாவின் மொத்த தேசிய உள்நாட்டு உற்பத்தியின் மீது ஏற்படுத்தும் தாக்கம் 1.8 சதவீதமாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்