உடல் பருமன் குறித்தக் கண்ணோட்டங்களை மாற்றுதல், தவறான எண்ணங்களை சரி செய்தல், சமூக விலக்கல்களை (களங்கங்களை) முடிவுக்குக் கொண்டு வருதல் மற்றும் இந்த மருத்துவ நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது இதய நோய்கள், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், கடுமையான முடக்கு வாதம் மற்றும் சில புற்றுநோய்கள் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
உலக சுகாதார அமைப்பின் கருத்துப் படி, 25 அல்லது அதற்கு மேற்பட்ட உடல் நிறை குறியீட்டு (BMI) எண் ஆனது அதிக எடை ஆகவும் மற்றும் 30 அல்லது அதற்கு மேற்பட்ட BMI எண் ஆனது உடல் பருமனாகவும் கருதப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'உடல் பருமன் மற்றும்... சில பற்றிய கருத்துகளை வெளிக் கொணர்தல்' என்பதாகும்.