மூன்று நாட்கள் நடைபெறும் உலக இந்திய உணவு – 2017 மாநாட்டை டெல்லியிலுள்ள விக்யான் பவனில் பிரதமர் துவக்கி வைத்தார்.
இம்மாபெரும் நிகழ்வை மத்திய உணவுப் பதப்படுத்துதல் அமைச்சகம், இந்திய தொழிலகக் கூட்டமைப்புடன் (CII – Confederation of Indian Industry) இணைந்து நடத்துகிறது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உலக உணவு மாநாடு முதன் முறையாக இந்தியாவில் நடத்தப்படுவதை குறிக்கும் விதத்தில் முதலீட்டாளர்களின் நண்பன் எனப் பொருள்படும் “நிவேஷ் பந்து” எனும் தனித்துவமான இணையவாயிலை பிரதமர் தொடங்கி வைத்தார். இந்தியாவுடன் சேர்ந்து ஜெர்மனி, டென்மார்க், ஜப்பான் ஆகிய நாடுகள் இம்மாநாட்டை நடத்துகின்றன.
2017ஆம் ஆண்டின் உலக இந்திய உணவு மாநாட்டின் கருத்துரு “உணவுப் பொருளாதாரத்தை மாற்றியமைத்தல்”.
இந்த இணையவாயிலானது உணவுப் பதப்படுத்துதல் துறைக்கு வழங்கப்பெறும் ஊக்கத் தொகைகள் பற்றிய தகவல்களையும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் உணவுப் பதப்படுத்துதல் கொள்கைகள் பற்றிய தகவல்களின் தொகுப்பையும் தரவல்லது.
உலக உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகளின் மூல ஆதார முனைமையாகவும், முதலீட்டாளர்களின் விருப்பத் தேர்வு இலக்காகவும் இந்தியாவை உருவாக்கி, அதன் மூலம் இந்தியாவின் உணவுப் பொருளாதாரத்தை மாற்றி அமைப்பதற்காகவும், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டுமென்ற தொலை நோக்கை நனவாக்குவதற்காகவும் இந்த உலக உணவு இந்தியா 2017 மாநாடு நடத்தப்படுகிறது.