இந்த நாள் 1945 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) நிறுவப்பட்டதைக் குறிக்கிறது.
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் எதிர்கொள்ளும் உணவுப் பற்றாக்குறை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவற்றின் சவால்கள் குறித்து மனித குலத்திற்கு நினைவூட்டுவதற்கு இந்த நாள் உதவுகிறது.
சாத்தியமான வேளாண் நடைமுறைகள், சமமான உணவுப் பங்கீடு மற்றும் அனைவருக்கும் சத்தான உணவு கிடைப்பதற்கான தேவைகள் குறித்து இந்த நாள் கவனம் செலுத்துகிறது.
2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘தண்ணீரே உயிர், தண்ணீரே உணவு. ஒருவரும் விடுபட்டு விடக் கூடாது’ என்பதாகும்.