TNPSC Thervupettagam

உலக உணவு நெருக்கடிகள் குறித்த IGAD ஆணையத்தின் பிராந்திய வாரியான அறிக்கை

July 23 , 2023 490 days 256 0
  • மேம்பாடு குறித்த அரசுகளுக்கிடையேயான ஆணையம் (IGAD) இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது, உணவு நெருக்கடிகளின் பாதிப்பு அளவைப் பற்றிய மகத்தான தகவல்களை வழங்கச் செய்வதோடு, தகவலறிந்து முடிவெடுப்பதற்கான ஒரு அடித் தளமாகச் செயல்படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டில் எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா, தெற்கு சூடான், சூடான் மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் உள்ள 55.45 மில்லியன் மக்களுக்கு அவசர உணவுப் பொருட்கள் வழங்கீட்டு உதவி தேவைப்பட்டதோடு, இது மிகக் கடுமையான நெருக்கடி நிலையையும் குறிக்கிறது.
  • இந்தப் பிராந்தியத்தில் நிலவும் மிகக் கடுமையான உணவு நெருக்கடிகளை எதிர்த்துப் போராடுவதற்காக இணைந்துச் செயல்படுவதற்கான ஒரு அவசரத் தேவையை இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
  • காலநிலைக் காரணிகள் ஆனது எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் நிலவும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மைக்கான முதன்மைக் காரணமாக அடையாளம் காணப் பட்டுள்ளது.
  • அதற்கு மாறாக டிஜிபெளட்டி, தெற்கு சூடான் மற்றும் சூடான் ஆகியவை திடீர்ப் பொருளாதாரத் தாக்கங்களால் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை நிலையை எதிர் கொண்டதாக இந்த அறிக்கை கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்