TNPSC Thervupettagam

உலக உணவு நெருக்கடிகள் பற்றிய அறிக்கை

May 8 , 2022 804 days 464 0
  • 2022 ஆம் ஆண்டிற்கான உலக உணவு நெருக்கடிகள் குறித்த ஒரு அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • இது உலகளவில் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை நிலவுவதை எடுத்துக் காட்டுகிறது.
  • உணவு நெருக்கடிகளுக்கு எதிரான உலகக் கட்டமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • 53 நாடுகள் அல்லது பிரதேசங்களில் உள்ள சுமார் 193 மில்லியன் மக்கள் 2021 ஆம் ஆண்டில் நெருக்கடிக் காலம் அல்லது மோசமான சூழ்நிலைகளில் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டனர்.
  • எத்தியோப்பியா, தெற்கு மடகாஸ்கர், தெற்கு சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில், சுமார் 6 லட்சம் பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையின் மிகக் கடுமையான கட்டத்தில் இருந்ததாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
  • இதற்கான மூன்று முக்கிய காரணிகள் மோதல், மோசமான வானிலை, பொருளாதார நெருக்கடிகள் ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்