TNPSC Thervupettagam

உலக உணவு விலைக் குறியீடு

September 16 , 2023 307 days 203 0
  • உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆனது இந்த விலைக் குறியீட்டினை வெளியிட்டுள்ளது.
  • உலகளவில் அதிகம் வர்த்தகம் செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலையினை இது மதிப்பிடுகிறது.
  • இது தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பால் பொருட்கள், இறைச்சி மற்றும் சர்க்கரை ஆகிய ஐந்து பொருட்களின் சராசரி விலைக் குறியீடுகளைக் கொண்டு உள்ளது.
  • ஆகஸ்ட் மாத விலை மதிப்பு ஆனது 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு பதிவான மிகக் குறைவான மதிப்பாகும்.
  • உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை அடுத்து 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் எட்டப்பட்ட இதுவரை பதிவான அனைத்து உச்சத்தினையும் விட இது 24% குறைவாக உள்ளது.
  • இந்த ஆண்டு உலக தானிய உற்பத்தி 2.815 பில்லியன் டன்களாக இருக்கும் என உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு கணித்துள்ளது.
  • இது முந்தைய மதிப்பீட்டான 2.819 பில்லியனில் இருந்து சற்று குறைவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்